சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்ணை ஓட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்..! போலீஸ் வலைவீச்சு


சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்ணை ஓட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்..! போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Jun 2022 11:45 AM GMT (Updated: 10 Jun 2022 11:49 AM GMT)

டெல்லியில் சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்ணை ஓட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டெல்லி,

தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் உள்ள ஒரு ஓட்டலில் 28 வயது பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் பழகிய நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, கடந்த மே 30 அன்று சமூக வலைதளம் மூலம் பழகிய நபருடன் 28 வயது பெண் ஒருவர் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த நபர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றதுடன், பாதிக்கப்பட்ட பெண் போன் செய்தாலும் எடுப்பதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story