குறுக்கு வழி அரசியல் மிகப்பெரும் சவாலாக உள்ளது: பிரதமர் மோடி


குறுக்கு வழி அரசியல் மிகப்பெரும் சவாலாக உள்ளது: பிரதமர் மோடி
x

குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தியோகர்,

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகார் நகரில் நடந்த பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது;

இந்தியாவில், பல குறுக்குவழிகள் உள்ளதால், குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்க வேண்டும். இந்தியாவில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டை அழித்துவிடும்.

குறுக்கு வழி அரசியல் மூலம் ஓட்டுக்களை பெற முடியும்.குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்கள், விமான நிலையங்கள் அமைத்தது இல்லை. நவீன நெடுஞ்சாலைகள் அமைத்தது கிடையாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தது இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுத்ததும் கிடையாது.

இந்தியா ஆன்மிகம், பக்தி மற்றும் யாத்திரை தலங்களின் பூமி. யாத்திரைகள் நம்மை சிறந்த தேசமாகவும், சமுதாயமாகவும் மாற்றியுள்ளது. தியோகரில் ஜோதிர்லிங்கமும், சக்தீ பீடமும் உள்ளது. நீண்ட தூரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தியோகர் நகருக்கு வருகின்றனர்" என தெரிவித்தார்

1 More update

Next Story