பெங்களூரு மாநகராட்சியில் கர்நாடக சட்டசபை தொகுதி வாரியாக வார்டுகள் எண்ணிக்கை விவரம்


பெங்களூரு மாநகராட்சியில் கர்நாடக சட்டசபை தொகுதி வாரியாக வார்டுகள் எண்ணிக்கை விவரம்
x

பெங்களூரு மாநகராட்சியில் கர்நாடக சட்டசபை தொகுதி வாரியாக வார்டுகளின் விவரம் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

அரசாணை பிறப்பித்தது

பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்த 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை கர்நாடக அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது. பெங்களூருவில் 28 தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளில் இடம் பெற்றுள்ள வார்டுகளின் விவரம் வருமாறு:-

எலகங்கா தொகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 5 ஆகவும், கே.ஆர்.புரத்தில் 9-ல் இருந்து 13 ஆகவும், பேடராயனபுராவில் 7 வார்டுகளில் இருந்து 10 ஆகவும், யஷ்வந்தபுராவில் 5 வார்டுகளில் இருந்து 8 ஆகவும், ராஜராஜேஸ்வரிநகரில் 9-ல் இருந்து 14 ஆகவும், தாசரஹள்ளியில் 8-ல் இருந்து 12 ஆகவும், மகாலட்சுமி லே-அவுட்டில் 7-ல் இருந்து 9 ஆகவும் வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

ராஜாஜிநகர்

புலிகேசிநகர், ஹெப்பால், சாந்திநகர், காந்திநகர், ராஜாஜிநகர், சிக்பேட்டை, மல்லேஸ்வரம் ஆகிய 7 தொகுதிகளில் வார்டுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த தொகுதிகளில் ஏற்கனவே இருந்து வார்டுகளே இருக்கின்றன. சர்வக்ஞநகர் தொகுதியில் 8-ல் இருந்து 10 ஆகவும், சி.வி.ராமன்நகர் தொகுதியில் 7-ல் இருந்து 10 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சிவாஜிநகரில் 7 வார்டுகள் இருக்கும் நிலையில் அதில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. கோவிந்தராஜ்நகரில் 9-ல் இருந்து 10 ஆகவும், விஜயநகரில் 8-ல் இருந்து 9 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சாம்ராஜ்பேட்டை தொகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளன. பசவனகுடியில் 6-ல் இருந்து 7 ஆகவும், பத்மநாபநகரில் 8-ல் இருந்து 10 ஆகவும், பி.டி.எம். லே-அவுட்டில் 8-ல் இருந்து 9 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாற்றம் செய்யவில்லை

ஜெயநகரில் வார்டுகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மகாதேவபுராவில் 8-ல் இருந்து 13 ஆகவும், பொம்மனஹள்ளியில் 8-ல் இருந்து 14 ஆகவும், பெங்களூரு தெற்கில் 7-ல் இருந்து 12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனேக்கல் ஒரே வார்டு உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


Next Story