மத்திய பிரதேசத்துக்கு கொரோனாவை விட காங்கிரஸ் தலைவர்களால் அதிக சேதம் : சிவராஜ் சிங் சவுகான் சாடல்


மத்திய பிரதேசத்துக்கு கொரோனாவை விட காங்கிரஸ் தலைவர்களால் அதிக சேதம் : சிவராஜ் சிங் சவுகான் சாடல்
x

கோப்புப்படம்

மத்திய பிரதேசத்துக்கு கொரோனாவை விட காங்கிரஸ் தலைவர்களால் அதிக சேதம் ஏற்படுள்ளதாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரசின் கொரோனா வைரஸ் என மத்திய பிரதேச நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த திக்விஜய் சிங், பா.ஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என தெரிவித்தார்.

இதை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'அவர் (திக்விஜய் சிங்) ஒரு சரியான ஒப்பீடு செய்துள்ளார். ஒப்பிடுவதற்கு அவர் வேறு எந்த வைரசையும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரசை மட்டுமே கண்டுபிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் இருவரும் கொரோனா வைரஸை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்' என தெரிவித்தார்.


Next Story