என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக பொறுப்பேற்று கொண்டார் - தின்கர் குப்தா

என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக  பொறுப்பேற்று கொண்டார் - தின்கர் குப்தா
x

தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) இயக்குனர் ஜெனரலாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தா இன்று பொறுப்பேற்று கொண்டாா்.

புதுடெல்லி,

தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) இயக்குனர் ஜெனரலாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தா இன்று பொறுப்பேற்று கொண்டாா்.

பஞ்சாப் பிரிவில் 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் தின்கர் குப்தா. அவரை என்.ஐ.ஏ.வின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு கடந்த 23-ந் தேதி ஒப்புதல் அளித்தது. இதன்படி வருகிற 2024-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி ஓய்வு பெறும் வரை அவர் அந்த பதவியில் நீடித்திடுவார்.

தின்கர் குப்தா,அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற அதிகாரி ஆவாா். இவா் ஜூன் 2004 முதல் ஜூலை 2012 வரை மத்திய அரசு பணியில் 8 ஆண்டுகள் பணியாற்றி உள்ளாா். இதில் சில ஆண்டுகள் உளவுத்துறைப் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளாா்.

இவா் பஞ்சாப் டிஜிபி யாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவா். போலீஸ் நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளாா்.

1 More update

Next Story