இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: சீன தூதர் விருப்பம்


இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: சீன தூதர் விருப்பம்
x

இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று சீன தூதர் விருப்பம் தெரிவித்தார்.

கொல்கத்தா,

கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில், இன்னும் அந்த சேவைகள் தொடங்கவில்லை.

இது, கொரோனா காலத்தில் நாடு திரும்பி இருந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக சீனா செல்வோருக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. இலங்கை, நேபாளம், மியானமர் வழியாக செல்ல வேண்டியுள்ளதால் பெரும் பண விரயம் ஏற்பட்டு உள்ளது.

எனவே இரு நாடுகளுக்கு இடையேயான ேநரடி விமான சேவையை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என இந்தியாவுக்கான சீன தூதர் ஸா லியோவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் சீனாவுக்கு திரும்ப விரும்புகின்றனர். இதற்கு வசதியாக இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க வேண்டும். இதற்காக இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.


Next Story