'திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டி அடிங்க' - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டியடித்து, ராமர், அனுமன் வாரிசுகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொப்பால்,
திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டியடித்து, ராமர் மற்றும் அனுமன் வாரிசுகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்கு பேர்போன கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார், கொப்பால் மாவட்டம் எலபுர்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, தங்களை ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள் என்றும், திப்புவின் ஆதரவாளர்கள் இல்லை என்றும் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திப்பு ஆதரவாளர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறிய அவர், திப்பு சுல்தானின் ஆதரவாளர்கள் வேண்டுமா? ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள் வேண்டுமா? என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
திப்புவின் ஆதரவாளர்கள் இங்கு இருக்கக்கூடாது என்றும், ராமர் மற்றும் அனுமனை கொண்டாடுபவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நளின் குமார் தெரிவித்தார். அவரது பேச்சு மத வெறுப்பை தூண்டும் வகையில் உள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.