திவ்ய தரிசன டோக்கன்கள்: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


திவ்ய தரிசன டோக்கன்கள்: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
x

திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

திருப்பதி,

அலிபிரி பூதேவி வளாகத்தில், அலிபிரி படித்துறை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள், அலிபிரிமெட்லா பாதையில் உள்ள கலிகோபுரத்தில் (படி எண். 2083) தரிசன டோக்கனை ஸ்கேன் செய்ய வேண்டும்.

இல்லையெனில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரி படிகள் வழியாக மட்டுமே திருமலைக்கு செல்ல வேண்டும். வேறு வழியில் திருமலை சென்றாலும் திவ்ய தரிசன டிக்கெட் பயன்படாது.

மெட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் டோக்கன்கள் வழங்கப்படும். வாகனம் மூலம் திருமலையை அடைய விரும்புவோருக்கு ஸ்ரீனிவாசம், ஆர்.டி.சி. பஸ் நிலையம் எதிரிலும், விஷ்ணு நிவாசம், ரெயில் நிலையம் பின்புறம், கோவிந்தராஜ சத்திரங்கள் ஆகிய பகுதிகளில் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.


Next Story