பா.ஜனதா ஆட்சியில் தான் வன்முறை சம்பவங்கள் நடக்கிறது; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு


பா.ஜனதா ஆட்சியில் தான் வன்முறை சம்பவங்கள் நடக்கிறது; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Dec 2022 6:45 PM GMT (Updated: 18 Dec 2022 6:46 PM GMT)

பா.ஜனதா ஆட்சியில் தான் வன்முறை சம்பவங்கள் நடக்கிறது என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

உப்பள்ளி:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் நேற்று விமானம் மூலம் உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் பா.ஜனதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜனதாவினர் தங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இதற்கு நடவடிக்கை எடுத்து கர்நாடக பா.ஜனதா அரசை ரத்து செய்திருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
  • chat