மலாலி மசூதியை கைப்பற்றுவது பற்றி கனவு காண வேண்டாம்; 'ஒரு பிடி மண்ணையும் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம்'


மலாலி மசூதியை கைப்பற்றுவது பற்றி கனவு காண வேண்டாம்;  ஒரு பிடி மண்ணையும் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம்
x

மலாலி மசூதியை கைப்பற்றுவது பற்றி கனவு காண வேண்டாம் என்றும், ஒரு பிடி மண்ணையும் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மங்களூரு;

மலாலி மசூதி பிரச்சினை

கர்நாடக மாநிலம் மங்களூரு மலாலி பகுதியில் உள்ள மசூதியை புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போது அந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. இதனால், அங்கு பிரசன்னம் பார்க்க இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இந்து கோவிலை சட்டபடி மீட்போம் என்று இந்து அமைப்பினா் கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்து அமைப்பினரை கண்டித்து நேற்று மங்களூருவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அப்துல் மஜீத் கலந்துகொண்டு பேசியதாவது:-

ஒரு பிடி மண்ணையும்...

மலாலி மசூதியை கைப்பற்றுவது பற்றி கனவு காண வேண்டாம். மசூதியில் இருந்து ஒரு பிடி மண்ணையும் எடுத்து செல்ல இந்து அமைப்பினரை அனுமதிக்க மாட்டோம். பல்லாரியில் 200 ஆண்டுகள் பழமையான சுகலம்மா கோவிலை பா.ஜனதா மூத்த தலைவராக இருந்த ஜனார்த்தனரெட்டி இடித்தார்.


அங்கு 'தாம்பூல பிரசன்னம்' நடத்த சங்பரிவார் அமைப்புகளுக்கு ைதரியம் உள்ளதா?. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை ஆர்.எஸ்.எஸ். பயமுறுத்துகிறது. முஸ்லிம் வியாபாரிகளை புறக்கணிக்கும் சங்பரிவார் தொண்டர்களே, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தில் தொழில் தொடங்க வருமாறு லூலூ குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யூசுப் அலியுடன் ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. மக்கள் சார்பு கட்சி அல்ல நாட்டை ஆளும் பா.ஜனதா, மக்கள் சார்பு கட்சி அல்ல.


இது அம்பானி, அதானி போன்ற பெரிய தொழில்அதிபர்களின் சார்பு கட்சி. நாட்டை அதிகாரம் செய்வதற்கு கல்வி, பொருளாதாரம், சமூகங்களை பா.ஜனதா அழித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மலாலி மசூதியில் இருந்து ஒரு பிடி மண்ணையும் இந்து அமைப்பினர் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என அப்துல் மஜீத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story