டாக்டர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக எழுத வேண்டும் - ஒடிசா கோர்ட்டு அதிரடி


டாக்டர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக எழுத வேண்டும் - ஒடிசா கோர்ட்டு அதிரடி
x

கோப்புப்படம்

அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், சட்ட அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடடாக்,

ஒடிசா மாநில ஐகோர்ட்டில், ஒருவர், தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை.

இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. பனிகிரஹி, டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒடிசா அரசுக்கு ஒரு உத்தரவையும் பிறப்பித்தார். "டாக்டர்கள் அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், சட்ட அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும். முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்குமாறு தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்" என்று உத்தரவில் கூறி இருந்தார்.


Next Story