துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை


துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை
x

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி,

துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார். இந்த நிலையில் துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் செல்லும் சாலை, தங்கும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.Next Story