குஜராத் துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் - பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி


குஜராத் துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் - பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி
x

துறைமுகத்திற்குச் சென்று சந்தேகத்திற்கிடமான கண்டெய்னரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

காந்திநகர்,

குஜராத் முன்ந்த்ரா துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னரில் போதைப்பொருள் இருப்பதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பஞ்சாப் மாநில போலீசார் ரகசிய தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் துறைமுகத்திற்குச் சென்று சந்தேகத்திற்கிடமான கண்டெய்னரில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த கண்டெய்னரில் துணி இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், ஸ்கேன் செய்து பார்த்த போது போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த 75 கிலோ ஹெராயின் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். இந்த போதைப்பொருள் பஞ்சாப் மாநிலம் செல்ல இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story