அசாமில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: போலீசார் விசாரணை
அசாமில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், கடத்திவந்த நபர்களை தேடி வருகின்றனர்.
கவுகாத்தி,
அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் ஒரு வாகனத்தில் மர்ம நபர்கள் போதைப்பொருட்களை கடத்திச்செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலை அடுத்து போலீசார், கமால்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள போர்கா என்ற இடத்தில், சனிக்கிழமை இரவு, "டெலிகாம் பணியில்" - என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மினி லாரியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும், மினி லாரியில் இருந்தவர்கள் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து போலீசார், மினி லாரியை சோதனை செய்ததில், அதில் ஐந்து கிலோ அபின் உட்பட 6 கிலோ போதைப்பொருள் மற்றும் 2000 மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story