திரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்


திரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
x

கோப்புப்படம் 

அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகர்தலா,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள தினாரம்பூர் பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அசாம் ரைபில்ஸ் படைப்பிரிவினர் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு பழைய குடோனில் மரிஜுவானா எனப்படும் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.1.92 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதனை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story