ஐதராபாத் விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி 5.9 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவர், 5.9 கிலோ ஹெராயின் போதைப் பொருளை தனது உடைமைகளில் மறைத்து கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.41.44 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story