பாகிஸ்தான்-குஜராத்துக்கு ரூ.1,500 கோடி போதை பொருளை கடத்த துபாயில் திட்டம்; என்.ஐ.ஏ. தகவல்


பாகிஸ்தான்-குஜராத்துக்கு ரூ.1,500 கோடி போதை பொருளை கடத்த துபாயில் திட்டம்; என்.ஐ.ஏ. தகவல்
x

ரூ.1,500 கோடி மதிப்பிலான போதை பொருளை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்த துபாயில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என என்.ஐ.ஏ. தகவல் தெரிவிக்கின்றது.



புதுடெல்லி,



குஜராத்தில் கட்ச் பகுதியில் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 8 மைல்கள் தொலைவில் இந்திய நீர்பரப்பில் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு ஒன்று பிடிபட்டது. அதில் 500 கிலோ எடை கொண்ட போதை பொருள் இருந்தது. கடத்தப்பட்ட அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,500 கோடி ஆகும்.

பாகிஸ்தானில் இருந்து குஜராத்துக்கு கடத்தப்பட்டு, பின்னர் அமிர்தசரஸ் நகருக்கு அவற்றை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இதுபற்றி பயங்கரவாத ஒழிப்பு படையினர், 2018-ம் ஆண்டு ஆகஸ்டில் வழக்கு பதிவு செய்தனர்.

அதன்பின்னர் தேசிய புலனாய்வு முகமையினர் (என்.ஐ.ஏ.) 2020-ம் ஆண்டு ஜூலையில் மறுவழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெண் ஒருவர் உள்பட போதை பொருள் கடத்தல்காரர்கள் 9 பேரை குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேர்த்து உள்ளனர்.

இந்த கடத்தலுக்கு துபாயில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. பயங்கரவாத நிதி திரட்டலுக்காகவும், இந்தியாவின் இளைய சமூகத்தினருக்கு தீங்கு விளைவிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று என்.ஐ.ஏ. தகவல் தெரிவிக்கின்றது.


Next Story