வங்காளதேசத்தில் இருந்து 4,000 டன் 'ஹில்சா' மீன்கள் இறக்குமதி


வங்காளதேசத்தில் இருந்து 4,000 டன் ஹில்சா மீன்கள் இறக்குமதி
x

துர்கா பூஜை சீசனுக்காக சுமார் 4,000 டன் ஹில்சா மீன்களை மேற்குவங்காளத்திற்கு அனுப்ப வங்காளதேச அரசு முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா,

இலிஷா என்று பிரபலமாக அறியப்படும் 'ஹில்சா' ஆற்று மீன்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகம். ருசி மிக்க இந்த வகை மீன்களை மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் விரும்பி உண்கின்றனர். வங்காளதேசத்தின் பத்மா மற்றும் மேக்னா நதிகள் சந்திக்கும் சந்த்பூரிலிருந்து வரும் ஹில்சா மீன்கள் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

வங்காளதேசத்தில் 2012 முதல் இந்தியாவிற்கு ஹில்சா மீன்கள் ஏற்றுமதிக்கு தடை உள்ளது. மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கோரிக்கையின் பேரில், ஹில்சா மீன் ஏற்றுமதியை அனுமதிக்க வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி இந்த ஆண்டு துர்கா பூஜை சீசனுக்காக சுமார் 4,000 டன் ஹில்சா மீன்களை மேற்குவங்காளத்திற்கு அனுப்ப வங்காளதேச அரசு முடிவு செய்துள்ளது.


Next Story