டெல்லி-துவாரகா விரைவுச்சாலை பணிக்காக 12 ஆயிரம் மரங்கள் மாற்று இடத்தில் நடப்பட்டு சாதனை


டெல்லி-துவாரகா விரைவுச்சாலை பணிக்காக 12 ஆயிரம் மரங்கள் மாற்று இடத்தில் நடப்பட்டு சாதனை
x

image courtesy: Nitin Gadkari twitter

அரியானா குர்காவுன் வழியாக துவாரகாவுக்கு ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 29 கி.மீ. தூரத்துக்கு விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க, அண்டை மாநில நகரங்களுக்கு விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்துக்கு மீரட் விரைவுச்சாலை, யமுனா விரைவுச்சாலை போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் அரியானா மாநிலம் குர்காவுன் வழியாக துவாரகாவுக்கு ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 29 கி.மீ. தூரத்துக்கு விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் முதலாவது உயர்மட்ட நகர்ப்புற விரைவுச்சாலையாக மேம்படுத்தப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.

மொத்தமுள்ள 29 கி.மீ. தூரத்தில் டெல்லியில் 10 கி.மீ. நீளத்துக்கு இந்த சாலை அமையும். இந்த சாலை தரைமட்டம், சுரங்கப்பாதை, மேம்பாலம், ஈரடுக்கு மேம்பாலம் என 4 நிலைகளில் அமைக்கப்படுகிறது. சாலைப்பணிக்காக இந்த வழியில் 12 ஆயிரம் மரங்கள் வேருடன் பெயர்க்கப்பட்டு மாற்று இடங்களில் நடப்பட்டதும், 34 மீட்டர் அகல சாலைக்கு ஒரு ஆற்றின் குறுக்கே ஒற்றைத்தூண் மட்டும் அமைப்பதும் குறிப்பிடத்தக்க சாதனை என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.


Next Story