அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.6 ஆக பதிவு


அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.6 ஆக பதிவு
x

கடந்த இரு தினங்களில் அந்தமான் பகுதிகளில் சுமார் 10 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

போர் பிளேர்,

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய மண்டலங்களில் அமைந்துள்ளது. இதனால் பிற பகுதிகளைக் காட்டிலும் அங்கு நில அதிர்வுகள் அதிக முறை பதிவாகின்றன. கடந்த இரு தினங்களில் அந்தமான் பகுதிகளில் சுமார் 10 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை 5.56 மணிக்கு அந்தமான் கடல் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த தொடர் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story