துமகூரு தொகுதி ஜனதாதளம் (எஸ்) கவுரி சங்கர் எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்திற்கு இடைக்கால தடை


துமகூரு தொகுதி ஜனதாதளம் (எஸ்) கவுரி சங்கர் எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்திற்கு இடைக்கால தடை
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:47 PM GMT)

துமகூரு தொகுதி ஜனதாதளம் (எஸ்) கவுரி சங்கர் எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

துமகூரு:

துமகூரு புறநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கவுரி சங்கர். ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு போலி காப்பீட்டு பத்திரங்கள் வழங்கி தேர்தலில் வெற்றி பெற்றதாக பா.ஜனதா சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, அவரது வெற்றி செல்லாது என கூறி தகுதி நீக்கம் செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தகுதி நீக்கம் செய்து ஐகோர்ட்டு விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் கவுரிசங்கர் போட்டியிட இருந்த தடை விலகியுள்ளது. இதனால் அவர் அதே தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story