5 நிமிடம் தாமதமாக வந்த காங்கிரஸ் வேட்பாளர்


5 நிமிடம் தாமதமாக வந்த காங்கிரஸ் வேட்பாளர்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தாலுகா அலுவலகத்தில் 5 நிமிடம் தாமதமாக வந்த காங்கிரஸ் வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைசூரு:

மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்தே கவுடா போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார். அவருடன் சித்தராமையாவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான யதீந்திராவும் வந்திருந்தார். அவர்கள் மைசூரு தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய 5 நிமிடம் தாமதமாக வந்தனர். இதனால் தாலுகா அலுவலக முன்பு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரசார், போலீசாருடன் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து சித்தேகவுடா, யதீந்திரா உள்பட 5 பேரை போலீசார் அனுமதி வழங்கினர். அவர்கள் அவசரம், அவசரமாக ஓடோடி தாலுகா அலுவலகத்திற்குள் ஓடினர். பின்னர் சித்தேகவுடா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story