கர்நாடகத்தில் ரூ.19 கோடிக்கு போதைப்பொருட்கள் பறிமுதல்


கர்நாடகத்தில் ரூ.19 கோடிக்கு போதைப்பொருட்கள் பறிமுதல்
x

கர்நாடக சட்டசபை தேர்தல் ேததி அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலத்தில் ரூ.19 கோடிக்கு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் ேததி அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலத்தில் ரூ.19 கோடிக்கு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ரூ.19 கோடிக்கு போதைப்பொருள்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி வெளியாகி இருந்தது. அன்றைய தினத்தில் இருந்து மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்கள், பிரசாரங்களில் ஈடுபடும் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஏனெனில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தேர்தலில் இந்த போதைப்பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுபோல், கர்நாடக சட்டசபை தேர்தலிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிகஅளவில் போதைப்பொருட்கள் சிக்கி இருப்பது ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.19 கோடிக்கு போதைப்பொருட்கள் சிக்கி உள்ளது.

4,880 குழுக்கள் அமைப்பு

அதாவது 1,452 கிலோ கஞ்சா உள்ளிட்ட இதர போதைப்பொருட்கள் சிக்கி இருக்கிறது. இவற்றில் அதிகமாக கஞ்சா தான் சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் எங்கும் கஞ்சா விளைவிக்கப்படுவதில்லை என்றும், ஆந்திராவில் இருந்து தான் கர்நாடகத்திற்கு பெருமளவு கஞ்சா கடத்தி வரப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,346 வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க 4,147 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அது 4,880 குழுக்களாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுபோல், மாநிலம் முழுவதும் 942 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசாருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரிகளும் சட்டசபை தேர்தலையொட்டி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துவது, வினியோகிப்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story