துடிப்பான கர்நாடகத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


துடிப்பான கர்நாடகத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

துடிப்பான கர்நாடகத்தை உருவாக்குவதே தங்களின் குறிக்கோள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவும் என்று நாம் யாரும் நினைக்கவில்லை. அதன் அனுபவத்தின் அடிப்படையில் நாங்கள் இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளோம். விவசாயத்திற்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளோம். அதாவது விவசாய உற்பத்தி மையங்கள், நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவது, சிறுதானிய உற்பத்திக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

ரேஷன் கடைகளில் அரிசியுடன் 5 கிலோ சிறு தானியங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். மக்களுக்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை ஆகும். பலமான, துடிப்பான கர்நாடகத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள். நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடியின் இலக்குப்படி அடைய கர்நாடகம் தேவையான பங்களிப்பை வழங்கும். பா.ஜனதாவின் இந்த திட்டங்களை பார்த்த மக்கள் எங்கள் கட்சியை ஆதரிப்பார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Related Tags :
Next Story