மந்திரி வி.சோமண்ணா திடீர் மயக்கம்


மந்திரி வி.சோமண்ணா திடீர் மயக்கம்
x

தேர்தல் பிரசாரத்தின்போது மந்திரி சோமண்ணா திடீரென மயக்கம் அடைந்தார்.

கொள்ளேகால்:

கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை மந்திரி வி.சோமணணா இந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் சித்தாமையாவை எதிர்த்தும், சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதனால் இரு தொகுதிகளிலும் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று வி.சோமண்ணா சாம்ராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட கொடிமோல் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட வி.சோமண்ணா திடீரென்று மயங்கினார். உடனே ஆதரவாளர்கள் அவரை கைதாங்கலாக பிடித்து இருக்கையில் அமர வைத்தனர். தொடர் பிரசாரம் காரணமாக அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதும், இதனால் அவர் மயங்கியதும் தெரியவந்தது. சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் மந்திரி வி.சோமண்ணா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

1 More update

Related Tags :
Next Story