பெங்களூருவில் சித்தராமையாவின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து


பெங்களூருவில் சித்தராமையாவின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் சித்தராமையாவின் தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று பெங்களூரு பசவனகுடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது நேற்றைய தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. சித்தராமையா இன்று (வியாழக்கிழமை) வழக்கம் போல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.


Related Tags :
Next Story