பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது தேர்தல் அதிகாரிகளிடம் வக்கீல்கள் புகார்


பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது தேர்தல் அதிகாரிகளிடம் வக்கீல்கள் புகார்
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:46 PM GMT)

பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது தேர்தல் அதிகாரிகளிடம் வக்கீல்கள் புகார் அளித்துள்ளனர்.

மைசூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் மைசூரு-குடகு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹா மைசூரு மாவட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை அவதூறாக பேசி வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் மைசூரு மாவட்டத்தில் பிரசாரம் செய்யும் பிரதாப் சிம்ஹா எம்.பி.க்கு தடை விதிக்கக்கோரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் புட்டே கவுடா தலைமையில் வக்கீல்கள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பிரதாப் சிம்ஹா எம்.பி. பிரசாரம் செய்யும் போது காங்கிரஸ் கட்சி தலைவர்களை அவதூறாக பேசி வருகிறார். இதனால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு வருணா தொகுதியில் சோமண்ணா, பிரதாப் சிம்ஹா எம்.பி. ஆகியோர் பிரசாரம் செய்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினரிடம் பா.ஜனதா தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பிரதாப் சிம்ஹா எம்.பி. திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பிரதாப் சிம்ஹா எம்.பி. பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story