கோலார் மாவட்டத்தில் பா.ஜனதா தோல்விக்கு முனிசாமி எம்.பி.யே காரணம்


கோலார் மாவட்டத்தில் பா.ஜனதா தோல்விக்கு முனிசாமி எம்.பி.யே காரணம்
x

கோலார் மாவட்டத்தில் பா.ஜனதா தோல்விக்கு முனிசாமி எம்.பி.யே காரணம் என்று கட்சி நிர்வாகிகள் சாடினர்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டத்தில் பா.ஜனதா தோல்விக்கு முனிசாமி எம்.பி.யே காரணம் என்று கட்சி நிர்வாகிகள் சாடினர்.

பாகுபாடு இன்றி

கோலார் மாவட்டம் முல்பாகலில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணை பொது செயலாளர் நரேந்திரா கூறுகையில், 'கோலார் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி பாகுபாடு இன்றி தொகுதி வாரியாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டது. அதனால் மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு மேற்கொண்ட பணிகளை உரிய முறையில் பதவியில் இருப்பவர்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

சட்டசபை தேர்தலில் மத்திய-மாநில அரசுகள் செய்த சாதனைகளை பொறுப்பில் உள்ளவர்கள் உரிய முறையில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. இதற்கு முதல் காரணம் கோலார் நாடாளுமன்ற உறுப்பினர் முனிசாமி ஆவார். இவரை போன்று மாநிலத்தில் மற்ற எம்.பி.க்கள் செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதியிலும் பா.ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூறி வெற்றி பெற முடியாது.

பரபரப்பு

அண்டை நாடுகளுக்கு குறைந்த விலையில் டீசல்-பெட்ரோல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் மத்திய அரசு நமது நாட்டில் மட்டும் ஏன் இந்த விலை உயர்வை நடைமுறைப்படுத்தியது. அதன் காரணமாகவே கோலார் மாவட்டத்தில் மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்' என்று கூறினார். இதையே மற்ற நிர்வாகிகளும் பேசி முனிசாமி எம்.பி.யை சாடினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story