காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை


காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
x

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்ட்டரில் இன்று 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படைக்கும், தடை செய்யப்பட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் பல்வேறு பயங்கரவாத குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

அவர்கள் இருவரும் அனந்த்நாக் நகரின் இஷ்பக் ஆ கனி மற்றும் அவந்திபோரா பகுதியை சேர்ந்த யவார் அயூப் தர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். சமீபத்தில் கடந்த 3 நாட்களில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் உள்பட 10 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


Next Story