உள்ளூர் கரன்சி மூலமாகவே இந்தியா - யுஏஇ இடையே வர்த்தகம்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அபுதாபி,
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக இந்தியா-அமீரகம் இடையே உள்ளூர் கரன்சியிலேயே வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த சந்திப்பின் போது எரிபொருள், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் இருநாடுகள் சார்ந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் கரன்சி மூலமாகவே இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வர்த்தகத்தை தொடங்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தற்போது 85 பில்லியன் டாலராக உள்ளது. இது 100 பில்லியன் டாலரை தாடும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.