சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு


சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2022 9:28 AM IST (Updated: 22 Nov 2022 10:04 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை,

பரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. அதே சமயத்தில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணியை தொடங்கினார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் 17-ந் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கும் நடைதிறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.


Next Story