உப்பள்ளி-ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு


உப்பள்ளி-ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
x

ரெயில் சேவை வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"உப்பள்ளி-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07355) நாளை (சனிக்கிழமை) வரை இயக்கப்பட இருந்தது. இந்த ரெயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது வருகிற 6-ந்தேதியில் இருந்து மார்ச் மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சனிக்கிழமைகளில் மட்டும் இயங்கும்.

ராமேசுவரம்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (07356) வருகிற 31-ந்தேதி(நாளை மறுநாள்) வரை மட்டும் இயக்கப்பட இருந்தது. இந்த ரெயில் சேவை வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும்."

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story