பஞ்சாப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் உண்ணாவிரத போராட்டம்


பஞ்சாப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் உண்ணாவிரத போராட்டம்
x

பஞ்சாப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் 5-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்; சீரற்ற வானிலை மற்றும் பூச்சித் தாக்குதலால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரித்கோட் மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜக்ஜித் சிங் கடந்த 19-ந் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது போராட்டம் நேற்று 5-வது நாளை எட்டியது. உண்ணாவிரத போராட்டத்தால் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து வருவதோடு, அவரின் உடல் எடையும் வெகுவாக குறைந்துள்ளது.

உடல் நிலை மோசமடைந்து வருவதை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும், ஒரு வேளை இந்த போராட்டத்தில் தான் இறந்தாலும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அமைதியான முறையில் தொடர வேண்டும் எனவும் ஜக்ஜித் சிங் கூறினார்.


Next Story