மகளை சந்திக்க வீட்டுக்கு வந்த காதலனை கொன்ற தந்தை


மகளை சந்திக்க வீட்டுக்கு வந்த காதலனை கொன்ற தந்தை
x

தெலுங்கானாவில் மகளை சந்திக்க வீட்டுக்கு வந்த காதலனை பெண்ணின் தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்கொண்டா,

தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில், தனது மகளை சந்திக்க வந்த காதலனை அந்த பெண்ணின் தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்கொண்டா மாவட்டம் குர்ரம்போடு மண்டலத்திற்கு உட்பட்ட கொப்போல் கிராமத்தில் வியாழக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக சந்தோஷ் என்ற இளைஞர், அவுலா மல்லையா, ராமுலம்மா என்பவர்களின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணை சந்திப்பதற்காக அவரது பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சந்தோஷ் அவர்களது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த பெண்ணின் பெற்றோர்கள் சந்தோஷை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை அவரை தாக்கியுள்ளார். இதில் சந்தோஷ் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story