புதிய கண்டுபிடிப்புகளில் கூட்டாட்சி ஒத்துழைப்பு அவசியம் - பிரதமர் மோடி

புதிய கண்டுபிடிப்புகளில் கூட்டாட்சி ஒத்துழைப்பு அவசியம் - பிரதமர் மோடி
x

கோப்புப்படம்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் கூட்டாட்சி ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் கூட்டாட்சி ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 2 நாள் மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், 21ஆம் நூற்றாண்டின் இந்திய வளர்ச்சியில், விஞ்ஞானம் மிகுந்த ஆற்றலை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற சிந்தனையுடன் பாஜக அரசு செயல்படுவதாக கூறிய பிரதமர் மோடி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நமது ஆராய்ச்சியை உள்ளூர் மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளில் மாநிலங்கள் தங்கள் திறமை மற்றும் நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story