மும்பை அந்தேரியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து


மும்பை அந்தேரியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து
x

கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 12-வது தளத்தில் தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story