விமானம் திடீர் ரத்தால் பயணிகள் அவதி
விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் இருந்து பாட்னாவுக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற காத்து இருந்தனர். அப்போது அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ரத்து செய்யப்பட்ட விமானத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமான நிலையத்தில் காத்து இருந்தனர். அதன்பின்னர் மாற்று விமானம் மூலம் பயணிகள் பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமான ரத்து குறித்து கடைசி நேரத்தில் தான் கூறியதாகவும், தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும் விமான நிறுவனம் மீது பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story