ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பெங்களூரு-அகர்தாலா இடையே புதிய விமான சேவை


ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பெங்களூரு-அகர்தாலா இடையே புதிய விமான சேவை
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பெங்களூரு-அகர்தாலா இடையே புதிய விமான சேவை தொடங்கப்படுகிறது.

தேவனஹள்ளி:

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது பெங்களூருவுக்கும்-திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவுக்கும் இடையே விஸ்தாரா விமான நிறுவனம், தனது முதல் சேவையை விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே இண்டிகோ, ஆகாசா விமான நிறுவனங்கள் இந்த வழித்தடத்தில் தங்கள் சேவையை வழங்கி வருகின்றன.

தப்போது அந்த பட்டியலில் விஸ்தாராவும் இணைகிறது. இதுகுறித்து விஸ்தாரா நிறுவனம் சார்பில் கூறுகையில், பெங்களூரு-திரிபுரா இடையே வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் விமான சேவையை தொடங்க உள்ளோம். கவுகாத்தி, அசாம் வழியாக இந்த விமானம் இயக்கப்பட உள்ளது. இதனால் பெங்களூருவுக்கு வந்து செல்பவர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.


Next Story