கட்டாய மதமாற்றம் மிகத் தீவிரமான விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டு கருத்து


கட்டாய மதமாற்றம் மிகத் தீவிரமான விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

பணம், பரிச்ப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆ.ர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதில் நேற்று நடந்த விசாரணையின் போது, இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் எனவும், தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுமாறும் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கட்டாய மதமாற்றம் மிகத் தீவிரமான விவகாரம் என்பதால் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் இந்த வழக்கில் உதவ வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.



Next Story