டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக 3 தஜிகிஸ்தான் நாட்டினரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேர் கடந்த 21-ந்தேதி பயணிகளாக வந்தடைந்தனர்.
அவர்கள் 3 பேரும் இஸ்தான்புல் நகருக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அவர்களிடம் நடந்த சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் 7.2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 4 லட்சத்து 66 ஆயிரத்து 200 யூரோக்கள் என மொத்தம் இந்திய மதிப்பில், 10 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுவரை இல்லாத வகையில் இது மிக அதிக அளவாகும். அவற்றை சுங்க சட்டம், 1962, பிரிவு 110-ன் கீழ் அதிகாரிகள் கைப்பற்றி, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story