இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரி டெல்லி வருகை


இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரி டெல்லி வருகை
x

டெல்லி வந்திறங்கிய இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

புதுடெல்லி,

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இடையிலான பேச்சுவார்த்தை டெல்லியில் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. முன்னதாக இன்றைய தினம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் மற்றும் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று, தென்கிழக்கு ஆசிய சங்க நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில் இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரி ரெட்னோ மார்சுடி இன்று டெல்லிக்கு வருகை தந்தார்.

அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் வரவேற்றனர். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்‌ஷி, "இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு" என்று தெரிவித்துள்ளார்.


Next Story