அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக முன்னாள் மத்திய மந்திரி அஜய் மக்கான் நியமனம்


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக முன்னாள் மத்திய மந்திரி அஜய் மக்கான் நியமனம்
x

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக அஜய் மக்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஜய் மக்கான் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் பொருளாளராக பவன் குமார் பன்சால் இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக அஜய் மக்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பொருளாளராக இருந்த பவன் குமார் பன்சால் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story