முன்னாள் மத்திய மந்திரி ஹர்மோகன் தவான் காலமானார்


முன்னாள் மத்திய மந்திரி ஹர்மோகன் தவான் காலமானார்
x

அவர், பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்துள்ளார்.

சண்டிகார்,

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் முன்னாள் சண்டிகார் எம்.பி.யாக பதவி வகித்த ஹர்மோகன் தவான் (வயது 83) உடல்நல குறைவால் காலமானார்.

அவர் மொகாலி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நீண்டகாலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பவன் குமார் பன்சால், முன்னாள் பா.ஜ.க. எம்.பி. சத்யபால் ஜெயின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

சண்டிகாரில் உள்ள மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களுக்காக போராடியவர். அதிலும், சமூகத்தின் ஏழ்மைநிலையில் உள்ள பிரிவினருக்காக போராடினார். மந்திரியாகவும், எம்.பி.யாகவும் பதவி வகித்தவர்.

1989-ம் ஆண்டு சண்டிகார் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தவான், சந்திரசேகர் ஆட்சியில் விமான போக்குவரத்து மந்திரியானார். அவர், பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்துள்ளார்.

இதன்பின்னர், 2018-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அவர், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சண்டிகாரில் போட்டியிட்டார். எனினும், அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story