மின்னல் தாக்கியதில் மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமி 4 பேர் பலி


மின்னல் தாக்கியதில் மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமி 4 பேர் பலி
x

சிறுவர், சிறுமி என 5 பேர் மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் சஹிப்கஞ்ச் மாவட்டம் பபுடொலா கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர் 5 பேர் நேற்று அந்த கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிந்தனர்.

அப்போது, அப்பகுதியில் மழை பெய்துகொண்டிந்தது. திடீரென இடியுடன், மின்னல் தாக்கியது. இதில் மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிருந்த 5 சிறுவர், சிறுமியர் மீது மின்னல் பாய்ந்தது.

இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி, 10 வயது சிறுவன், 9 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மின்னல் தாக்குதலில் படுகாயமடைந்த 9 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story