போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி ரூ.42 லட்சம் மோசடி - வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது


போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி ரூ.42 லட்சம் மோசடி - வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது
x

தொழிலதிபர் ஒருவரின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி ரூ.42 லட்சம் மோசடி செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

எர்ணாகுளம்,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், தொழிலதிபர் ஒருவரின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி, லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக, வடமாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய எர்ணாகுளம் போலீசார், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபரின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி, வணிகம் தொடர்பான தேவைகள் இருப்பதாகக் கூறி, பலரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது.


Next Story