பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகை


பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகை
x

கோப்புப்படம் 

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இந்தியாவுக்கு வரக்கூடும் என்று மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மற்றும் பிரான்ஸ் அமைச்சர் கிறிசோலா ஜக்கரோபவுலோ ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அணுசக்தியில் இந்தியா-பிரெஞ்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிரான்ஸ் அமைச்சர் தற்போது இந்தியா வந்துள்ளார். மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்கை சந்தித்து, கூட்டு ஒத்துழைப்புடன் மராட்டிய மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூர் தளத்தில் அணு உலைகள் அமைப்பதை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தார். இந்தியாவுடன் அணுசக்தி ஆலோசகர் தாமஸ் மியூசெட் உள்ளிட்ட பிற பிரான்ஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.


Next Story