நடுவானில் விமானத்தின் கண்ணாடியில் விரிசல்: அவசர அவசரமாக தரையிறக்கம்
180 பயணிகளுடன் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
டெல்லி,
மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து டெல்லி நோக்கி 180 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று மாலை புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கண்ணாடியில் விரிசல் குறித்து டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்படது.
உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் விமான பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் விரிசல் ஏற்பட்ட கண்ணாடி மாற்றப்பட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story