ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: 24 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணி: களம் இறங்கிய ராணுவம்...!


ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: 24 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணி: களம் இறங்கிய ராணுவம்...!
x

மத்திய பிரதேசத்தில், 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி, 24 மணி நேரத்தை கடந்து தொடருவதால், ராணுவம் களம் இறங்கி உள்ளது

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சோஹூர் அருகே மூங்வாலி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் வருகின்றனர்.

மேலும் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் இந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 50 அடியில் இருப்பதாகவும் சிறுமையை பத்திரமாக மீட்பதற்கான பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மாநில பேரிடர் மீட்பு குழு உடன் இராணுவமும் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. மத்திய பிரதேச முதல்-மந்த்ரி சிவராஜ் சிங் செளஹான் செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பவர், தொடர்ந்து மீட்புப் படையினர், குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.

தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாகவும், நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் கூறினார். பெண் குழந்தையை பத்திரமாக மீட்க மீட்புக் குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். குழந்தையின் நலனுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.


Next Story