'கோட்சே இந்தியாவின் மதிப்புமிகு புதல்வன்' - மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கருத்து


கோட்சே இந்தியாவின் மதிப்புமிகு புதல்வன் - மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கருத்து
x

கோட்சே இந்தியாவில் பிறந்தவர் என்றும் படையெடுத்து வந்தவர் அல்ல என்றும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.

தாண்டேவாடா,

மராட்டிய மாநிலத்தின் சில நகரங்களில் சமீபத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அந்த மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், 'மாநிலத்தில் திடீரென அவுரங்கசீப்பின் வாரிசுகள் பிறப்பெடுத்துள்ளனர்' என்று கருத்து கூறினார். அதற்கு, 'அவர்கள் கோட்சேயின் (காந்தி கொலையாளி) வாரிசுகள்' என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சத்தீஷ்கார் மாநிலத்தின் தாண்டேவாடா நகருக்கு சென்ற மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம், ஓவைசியின் கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு கிரிராஜ் சிங், 'நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை கொன்றவர் என்றால், அவர் இந்தியாவின் மதிப்பு மிக்க மகனும்தான். கோட்சே இந்தியாவில் பிறந்தவர். மொகலாய மன்னர்கள் பாபர், அவுரங்கசீப் போல இங்கு படையெடுத்து வந்தவர் அல்ல' என்றார்.


Next Story