சர்ச்சைக்குரிய வாசனை திரவிய விளம்பரத்தை நீக்க வேண்டும்; டுவிட்டர், யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


சர்ச்சைக்குரிய வாசனை திரவிய விளம்பரத்தை நீக்க வேண்டும்; டுவிட்டர், யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x

பிரபல நிறுவனம் ஒன்றின் வாசனை திரவியத்துக்கான விளம்பரம் பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய இந்த விளம்பரத்தை நீக்குமாறு டுவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மேற்படி நிறுவனங்களுக்கு மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இந்த விளம்பரம் ெபண்களின் கண்ணியத்தை மீறும் வகையில் இருப்பதாக அதில் கூறியுள்ள மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

1 More update

Next Story